Enable Javscript for better performance
ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    ஏரி, ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

    By DIN  |   Published on : 25th July 2019 09:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் செஞ்சியில் புதன்கிழமை தூக்குக் கயிறு, திருவோடு ஏந்தி நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
    விழுப்புரம் மாவட்ட செயலர் கணக்கன்குப்பம் என்.முருகன் தலைமை வகித்தார். தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பூ.விசுவநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடக்கிவைத்துப் பேசினார்.
    மாநில துணைச் செயலர் ஆர்.சுப்பிரமணி முன்னிலை வகித்தார். மாவட்ட அமைப்பாளர் நாயனூர் ஆர்.முருகதாஸ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.அய்யாக்கண்ணு, ஒன்றிய அமைப்பாளர்கள் மனோகரன், பார்த்திபன், கே.பூபாலன் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். 
    ஆர்ப்பாட்டத்தில், அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க் கடனை தள்ளுபடி செய்யவேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளங்களின் நீர்வரத்து கால்வாய்கள் ஆக்கிரமிப்பை அகற்றி தூர்வார வேண்டும். 
    விவசாய இடுபொருள் மற்றும் இயந்திரங்களுக்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். கண்டாச்சிபுரம் காவல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ள சேரானூர் கிராமத்தை அனந்தபுரம் காவல் நிலையத்துடன் இணைக்க வேண்டும்.  
    நந்தன் கால்வாய் திட்டத்தை சீர் செய்திடவும், பெண்ணையாறு, பாலாறு இணைப்புத் திட்ட ஆய்வுப் பணிக்காக ரூ. 35 லட்சத்தை ஒதுக்கி, நந்தன் கால்வாய் திட்டத்துடன் இணைக்க ரூ. 500  கோடியில் திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.வி.சண்முகம் கூறிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் 
    வலியுறுத்தப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai