Enable Javscript for better performance
கஞ்சா வைத்திருந்தவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    உளுந்தூர்பேட்டை அருகே கஞ்சா வைத்திருந்தவரை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    உளுந்தூர்பேட்டை அருகே திருநாவலூரை அடுத்த எம்.குன்னத்தூர் பகுதியில் திருநாவலூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பலராமன் தலைமையிலான போலீஸார் ரோந்து சென்றனர்.
    அப்போது, எம்.குன்னத்தூர் மலையரடிவாரப் பகுதியில் பையுடன் நின்றிருந்த ஒருவரைப் பிடித்து சோதனையிட்டனர். அவர் பையில் கஞ்சாப் பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரிடமிருந்த ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா பொட்டலங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து திருநாவலூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, 
    திருநாவலூர் அருகே எல்லை கிராமத்தைச் சேர்ந்த கலியபெருமாள் மகன் ஏழுமலையை (50) கைது செய்து, விசாரணை நடத்தி  வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai