Enable Javscript for better performance
கிராம சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம் ஊராட்சிகளுக்கு உள்பட்ட கிராமங்களில் கிராம சபைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
    இந்திலி கிராமத்தில் ஊராட்சி அலுவலகம் அருகே நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்துக்கு கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் ச.ஜோசப்கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
    கூட்டத்தில் மழைநீர் சேகரிப்பு குறித்து விவாதிக்கப்பட்டது.
    அதேபோல சின்னசேலம், தியாகதுருகம் ஊராட்சிகளுக்கு உள்பட்ட பகுதிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற்றது. 
    கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பங்கேற்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai