Enable Javscript for better performance
குடிநீர் பிரச்னை:  கிராம மக்கள் சாலை மறியல்- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி அருகே குடிநீர் கோரி கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    கள்ளக்குறிச்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட தென்கீரனூர் கிராமத்தில் உள்ள பிள்ளையார் கோயில் பகுதியில்  28 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். 
    இவர்களுக்கு போதிய அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படாததால், அருகே மற்றொரு பகுதியில் இருந்து குடிநீர் எடுத்து பயன்படுத்தி வந்ததாகத் தெரிகிறது.  இதற்கு அங்கு இருந்தவர்கள் அனுமதி மறுத்தனர். 
    இதனால் ஆத்திரமடைந்த தென்கீரனூர் மக்கள் கள்ளக்குறிச்சி- தென்கீரனூர் சாலையில் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர். 
    அந்த நேரத்தில் அவ்வழியாக வந்த கூடுதல் வட்டார வளர்ச்சி அலுவலர் ஷபி, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி குடிநீர் வழங்க ஏற்பாடு செய்தார். இதையடுத்து, பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai