Enable Javscript for better performance
குண்டர் சட்டத்தின் கீழ் பெண் கைது- Dinamani

சுடச்சுட

    

    சின்னசேலம் அருகே குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ், பெண் சாராய வியாபாரியை போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
    விழுப்புரம் மாவட்டம்,  சின்னசேலம் அருகே மன்மலை கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி சாந்தி (32).  இவர், அந்தப் பகுதியில் சட்ட விரோதமாக சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்தாராம். இதுதொடர்பாக சின்னசேலம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. 
    இந்த நிலையில், சாந்தியை போலீஸார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து, அவர் சாராய விற்பனையில் ஈடுபடுவதைத் தடுக்க குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், மாவட்ட ஆட்சியருக்கு பரிந்துரை செய்தார்.
    இதைப் பரிசீலித்த மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன், சாந்தியை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார்.
    இதையடுத்து, வேலூர் மத்திய சிறையில் இருந்து வரும் சாந்தியை போலீஸார் புதன்கிழமை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து, மீண்டும் சிறையிலடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai