Enable Javscript for better performance
கூழாங்கல்கள் திருட்டு: பொக்லைன் இயந்திரம் பறிமுதல்- Dinamani

சுடச்சுட

    

    கோட்டக்குப்பம் அருகே கூழாங்கல்கள் திருட்டில் ஈடுபட்ட ஒருவர் மீது போலீஸார் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனர். மேலும், அந்த இடத்தில் இருந்த பொக்லைன் இயந்திரத்தையும் பறிமுதல் செய்தனர்.
    கோட்டக்குப்பம் அருகே மொன்னையன்பேட்டை பகுதியில் அரசு அனுமதியின்றி தனியார் நிலத்திலிருந்து கூழாங்கல்கள் திருடப்பட்டு, கடத்தப்படுவதாக கனிமவளத் துறை அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
    இதையடுத்து, விழுப்புரம் உதவி புவியியலாளர் சுந்தரராமன் தலைமையிலான அதிகாரிகள் அந்தப் பகுதிக்கு புதன்கிழமை சென்றனர். அதிகாரிகளைப் பார்த்ததும் அங்கிருந்தவர்கள் தப்பியோடி 
    விட்டனர்.
    இதையடுத்து நடத்தப்பட்ட ஆய்வில், வெங்கடேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் மண்ணை வெட்டி கூழாங்கல்கள் திருடப்பட்டது தெரியவந்தது. பின்னர், அங்கிருந்த பொக்லைன் இயந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
    இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, வெங்கடேசன் மகன் பெரியசாமியைத் தேடி வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai