Enable Javscript for better performance
சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    மாம்பழப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளியில் காணை காவல் நிலையம் சார்பில், சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் மாணவர்கள் பேரணி செவ்வாய்க்கிழமை  நடைபெற்றது.
    தலைமை ஆசிரியர் க.தனவேல் தலைமை வகித்தார். உதவித் தலைமை ஆசிரியர் யமுனாபாய் முன்னிலை வகித்தார். காணை காவல் நிலைய உதவி ஆய்வாளர் வி.சிவானந்தகுமார், தலைமைக் காவலர் ஜி.ரமேஷ் ஆகியோர் பங்கேற்று, சாலைப் பாதுகாப்பு, போக்குவரத்து விதிகள், தலைக்கவசம் அணிவதன் அவசியம், விபத்து தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
    இதைத் தொடர்ந்து, மாணவர்கள் பங்கேற்ற சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. காவல் உதவி ஆய்வாளர் வி.சிவானந்தகுமார் பேரணியைத் தொடக்கிவைத்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் அ.தன்ராஜ், ஆசிரியர் ஜி.கலா, உடல் கல்வி ஆசிரியர் ஜி.ராஜலட்சுமி உள்ளிட்ட ஆசிரியர்கள்,  மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
    மாம்பழப்பட்டு பிரதான சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக பேரணியாகச் சென்ற மாணவர்கள், எதிரே வந்த வாகன ஓட்டிகளிடம் தலைக்கவசம், சீட் பெல்ட் அணிய அறிவுறுத்தினர். 
    மேலும், சாலைப் பாதுகாப்பு விதிகள் குறித்த விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கிச் சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai