Enable Javscript for better performance
சாலையில் தீப்பிடித்து எரிந்த கார்!- Dinamani

சுடச்சுட

    

    கண்டமங்கலம் அருகே புதன்கிழமை சாலையில் சென்றுகொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. எனினும், காரில் வந்தவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார்.
    புதுவை மாநிலம், சஞ்சீவி நகர் பகுதியைச் சேர்ந்த சிங்காரம் மகன் பரிபாலன் (46). இவர், புதன்கிழமை மாலை புதுச்சேரியிலிருந்து விழுப்புரம் நோக்கி காரில் வந்து கொண்டிருந்தார். கண்டமங்கலம் அருகே எஸ்.ஆண்டிப்பாளையம் பகுதியில் வந்தபோது, திடீரென காரின் முன்பக்கத்தில் இருந்து புகை கிளம்பியதுடன், தீப்பொறி உருவானது. இதனால், அதிர்ச்சியடைந்த பரிபாலன் காரை சாலையோரம் நிறுத்திவிட்டு உடனடியாக கீழே இறங்கினார். 
    அப்போது, காரின் முன்பக்கம் உருவான தீ மேலும் பரவி, கார் முழுவதும் தீப்பற்றியது. இதுகுறித்து தீயணைப்புத் துறைக்கும், போலீஸாருக்கு அவர் தகவல் அளித்தார்.
    உடனடியாக புதுச்சேரி திருக்கனூரிலிருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். விபத்து குறித்து கண்டமங்கலம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai