Enable Javscript for better performance
சாலை விபத்தில் முதியவர் பலி- Dinamani

சுடச்சுட

    

    திண்டிவனம் அருகே நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற இரு சக்கர வாகனம் மீது கார் மோதியதில் முதியவர் புதன்கிழமை உயிரிழந்தார்.
    திண்டிவனம் -மரக்காணம் சாலை காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜமாலுதீன் (70). இவர், புதன்கிழமை பிற்பகல் தனது மகள் சாய்தபியை (45), இரு சக்கர வாகனத்தில் அமரவைத்து, வீரம்குளம் பகுதிக்குச் சென்று கொண்டிருந்தார். புதுச்சேரி புறவழிச்சாலைப் பகுதியில், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற போது, திருச்சி நோக்கிச் சென்ற அடையாளம் தெரியாத கார், இவரது இரு சக்கர வாகனம் மீது மோதிவிட்டு, நிற்காமல் சென்றுவிட்டதாம்.  இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஜமாலுதீன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். சாய்தபி  பலத்த காயமடைந்தார்.
    தகவலறிந்து திண்டிவனம் காவல் ஆய்வாளர் சீனிபாபு தலைமையிலான போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று காயமடைந்த சாய்தபியை மீட்டு, திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai