Enable Javscript for better performance
சுய தொழில் வேலைவாய்ப்பு விழிப்புணர்வு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    விழுப்புரத்தில் மத்திய அரசின் மக்கள் தொடர்பு கள அலுவலகம், நேரு இளையோர் மையம் ஆகியவை சார்பில்,  இளைஞர்களுக்கான சுய தொழில் வேலைவாய்ப்பு மற்றும் கடன் திட்ட விழிப்புணர்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
    விழுப்புரம் நேரு இளையோர் மைய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு நேரு இளையோர் மைய ஒருங்கிணைப்பாளர் ஜே.சம்பத்குமார் தலைமை வகித்தார். மக்கள் தொடர்பு கள அலுவலக உதவி இயக்குநர் தி.சிவக்குமார் தொடக்கவுரையாற்றினார்.  
    மாவட்டத் தொழில் மைய உதவி இயக்குநர் வீ.மோகனவேலு,  இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டம் குறித்து பேசினார். 
    மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் இரா.சேதுராமன் கடன் திட்டங்கள் குறித்து பேசியதாவது: 
    இளைஞர்களின் எதிர்காலம் சிறப்பாக அமைய அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக, சுய தொழில் தொடங்குவதற்கு பல்வகையான கடன் வழங்கும் திட்டங்கள் உள்ளன. ஆனால், இளைஞர்கள் மாதச் சம்பள வேலையைத்தான் விரும்புகிறார்கள்.
    இதனால், அவர்கள் தம் அறிவுக்கும், ஆற்றலுக்கும் குறைவான ஏதோ ஒரு வேலையில் சேர்ந்து குறைவான சம்பளம் பெறுகின்றனர். வளமான வாழ்க்கைக்கு விருப்பமான தொழிலில் தேவைப்படும் பயிற்சிகளைப் பெற்று சுயதொழில் தொடங்க வேண்டும். இளைஞர்கள் வேலையின்றி இருப்பதைவிட, சுயதொழில் தொடங்க முன்வர வேண்டும் என்றார் அவர்.
    இந்தியன் வங்கி சுயதொழில் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் கு.சரண்ராஜ் பயிற்சியின்  திட்டங்கள் குறித்து விளக்கினார்.  இதைத் தொடர்ந்து, தொழில் தொடங்குவது குறித்த விவாதப் போட்டி நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அரசு மகளிர் கல்லூரி, அரசு கலைக் கல்லூரி மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர். நேரு இளையோர் மையத் திட்ட ஒருங்கிணைப்பாளர் லாவண்யா நன்றி கூறினார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai