Enable Javscript for better performance
செஞ்சி அருகேதம்பதியைத் தாக்கி நகை பறித்த வழக்கு: 3 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சி அருகே தம்பதியைத் தாக்கி நகை பறித்த வழக்கு: 3 பேர் கைது

    By DIN  |   Published on : 25th July 2019 08:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செஞ்சி அருகே வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தம்பதியைத் தாக்கி நகை மற்றும் செல்லிடப்பேசி பறித்துச் சென்ற வழக்கில்  3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    செஞ்சி வட்டம், வடபுத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (45). இவர் தனக்குச் சொந்தமான வயலில் வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த 21-ஆம் தேதி இரவு வீட்டின் மாடியில் வெங்கடேசன், தனது மனைவி நளினி (40),  மகள் ரம்யா (13) ஆகியோருடன் தூங்கிக்கொண்டிருந்தார்.
    அப்போது, நள்ளிரவில் வந்த மர்ம நபர்கள், மூவரையும் தாக்கி நகை மற்றும் செல்லிடப்பேசியை பறித்துச் சென்றனர். இதில் காயமடைந்த மூவரும் மீட்கப்பட்டு தீவிர சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் 
    சேர்க்கப்பட்டனர்.
    இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி டிஎஸ்பி நீதிராஜ் தலைமையிலான போலீஸார் மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். 
    இந்த நிலையில் தம்பதியிடம் இருந்து பறித்த செல்லிடப்பேசி எண்ணைக் கொண்டு ஆய்வு செய்ததில், கொள்ளையில் ஈடுபட்ட நபர் ஒருவர் திண்டிவனம் அருகே ரெட்டணையில் இருப்பது தெரிந்து அவரைக் கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடத்தி மேலும் இருவரை கைது செய்தனர்.
    விசாரணையில் அவர்கள்,  ரெட்டணை கிராமத்தைச் சேர்ந்த வெங்கடேசன் மகன் சஞ்சய் (எ) ராமலிங்கம் (21), நாரேரிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த வினோத் (28), கொங்கரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் சத்தியமூர்த்தி (21) எனத் தெரிய வந்தது.
    அவர்களிடம் இருந்து கார் மற்றும் அரை பவுன் தங்க நகையை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய குமரன் (22) என்பவரை தேடி 
    வருகின்றனர்.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai