Enable Javscript for better performance
மாற்றுத்திறன் மாணவர்களுக்கு மருத்துவ முகாம்- Dinamani

சுடச்சுட

    

    தியாகதுருகம் வட்டார வள மையத்துக்கு உள்பட்ட பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ முகாம் தியாகதுருகம் வட்டார வள மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. 
    முகாமுக்கு வட்டார வள மைய மேற்பார்வையாளர் (பொ) 
    ஜி.ஷேளிதாரா தலைமை வகித்தார். வட்டாரக் கல்வி அலுவலர்கள் கீதாலட்சுமி, முத்துசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். வட்டார ஒருங்கிணைப்பாளர் அ.சாந்தகுமாரி வரவேற்றார். 
    சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகளுக்கான மாநில உறுப்பினர்  ஷீலா ஜெயந்தி, குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் குறித்து பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கினார். 
    முகாமில், கேட்கும் திறன் குறைபாடுடைய 26 மாணவர்களையும், உடலியக்க குறைபாடுடைய 44 பேரையும்,  பார்வைத்திறன் குறைபாடுடைய 39 பேரையும், அறிவுசார் குறைபாடுடைய 53 பேரையும் மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு கண்டறிந்தனர். 
    காது கேளாத மாணவர்கள் 5 பேருக்கு காதொலிக் கருவியும்,   28 பேருக்கு முடநீக்கியல் உபகரணங்களும், 9 பேருக்கு கண் கண்ணாடி வழங்கவும் பரிந்துரை செய்ய
    தனர்.  34 பேர் தேசிய அடையாள அட்டை பெறுவதற்கு  தேர்வு செய்யப்பட்டனர். 
    முகாமுக்கான ஏற்பாடுகளை தியாகதுருகம் வட்டார வள மைய ஆசிரியர்கள், பயிற்றுநர்கள், மற்றும் சிறப்பு பயிற்றுநர்கள் அமலிராணி, இராசகுமார், தேவேந்திரன், தட்சிணாமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர். 
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai