முகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் விழுப்புரம்
சாலை விபத்தில் விவசாயி மரணம்
By DIN | Published On : 30th July 2019 10:08 AM | Last Updated : 30th July 2019 10:08 AM | அ+அ அ- |

திண்டிவனம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் விவசாயி உயிரிழந்தார்.
புதுச்சேரி காராமணிக்குப்பத்தைச் சேர்ந்த ஆசீர்வாதம் மகன் அவான்தேன் (50). விவசாயியான இவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே எடையன்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு சாலையைக் கடக்க முயன்றார்.
அப்போது, அந்த வழியாகச் சென்ற அடையாளம் தெரியாத வாகனம் அவான்தேன் மீது மோதியதாகத் தெரிகிறது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு, புதுச்சேரியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
எனினும், அங்கு அவான்தேன் திங்கள்கிழமை அதிகாலை உயிரிழந்தார். விபத்து குறித்து கிளியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.