கிராமப்புற விவசாய தொழிலாளர்கள் சங்கக் கூட்டம்
By DIN | Published on : 13th June 2019 09:40 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
அனைத்திந்திய கிராமப்புற தொழிலாளர்கள் சங்க மாவட்ட நிர்வாகிகள் கூட்டம், உளுந்தூர்பேட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மாவட்டச் செயலர் டி.கலியமூர்த்தி தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் ஆர்.சுசிலா வரவேற்றார். மாவட்ட நிர்வாகிகள்
சி.கொளஞ்சிநாதன், செண்பகவள்ளி, ஜி.ஏழுமலை, கே.மணிகண்டன், பாபு, எம்.செல்வம், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் மாவட்டச் செயலர் எம்.வெங்கடேசன், மாநிலத் தலைவர் பாலசுந்தரம் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கிராமப்புற விவசாயத் தொழிலாளர்களுக்கு உரிய வேலைவாய்ப்பை மத்திய, மாநில அரசுகள் வழங்க வலியுறுத்தப்பட்டது.