தமிழில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு

சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில், தமிழில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

சங்கராபுரத்தில் தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கம் சார்பில், தமிழில் சிறப்பிடம் பெற்ற பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு தமிழாசிரியர் அ.ராமசாமி தலைமை வகித்தார். சைவ சித்தாந்தப் பேராசிரியர் ச.சம்புலிங்கம், கல்லைத் தமிழ்ச் சங்கச் செயலர் 
செ.வ.மதிவாணன், கூடுதல் வட்டாரக் கல்வி அலுவலர் இரா.அரங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருந்தாளுநர் இரா.மணிவேல் வரவேற்றார்.
சாதுகற்கண்டு சிவஞான அடிகள் தொடக்கவுரை ஆற்றினார். சங்கத் தலைவர் குறிஞ்சி 
அரங்க.செம்பியன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். ஓய்வு பெற்ற ஓவிய ஆசிரியர் மு.கலைச்செழியன் குறள் விளக்கம் அளித்தார். 
விழாவில் தமிழ், தமிழர், தமிழ்நாடு என்ற தலைப்பில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் புதுச்சேரி சு.சண்முகசுந்தரம், கண்ணதாசனின் மறக்க முடியாத நினைவுகள் என்ற தலைப்பில் தியாகதுருகம் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.துரைமுருகன் ஆகியோர் பேசினர்.
10, 12-ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சங்கராபுரம் வட்ட அளவிலான அரசுப் பள்ளிகளில் தமிழ்ப் பாடத்தில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டியும், 100 
சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளை வாழ்த்தியும் வள்ளலார் மன்றச் செயலர் இரா.நாராயணன், அரிமா மாவட்டத் தலைவர் வ.விஜயகுமார், கள்ளக்குறிச்சி மது விலக்கு அமல் பிரிவு அலுவலக ஊழியர் ந.தமிழரசி ஆகியோர் கேடயம், சான்றிதழ், பரிசுகள் வழங்கி கௌரவித்தனர்.
வணிகர் பேரவை மாவட்டப் பொருளாளர் இராம.முத்துக்கருப்பன், ஓய்வூதியர் சங்கத் தலைவர் கு.கலியமூர்த்தி, செயலர் கே.மதியழகன், நெடுமானூர் பாரதியார் தமிழ்ச் சங்கத் தலைவர் இரா.கதிர்வேல், சங்கைத் தமிழ்ச் சங்கப் பொருளாளர் தி.கோ.நரசிம்மன், அரசம்பட்டு திருவள்ளுவர் தமிழ்ச் சங்கத் தலைவர் வெ.சௌந்தரராஜன், தமிழாசிரியர் 
கோ.பெரியசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தமிழாசிரியர் மு.லெனின், குறிஞ்சித் தமிழ்ச் சங்கத் தலைவர் வி.முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com