கிணற்றை தூர்வாரியபோது மண் சரிந்ததில் தொழிலாளி பலி
By DIN | Published on : 14th June 2019 09:54 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
செஞ்சி அருகே கிணற்றை தூர்வாரியபோது மண் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தார்.
மேல்மலையனூர் வட்டம், சிந்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த குப்பன் மகன் ஐயப்பன் (39). இவர், செட்டித்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணிக்குச் சொந்தமான விவசாயக் கிணற்றில் புதன்
கிழமை தூர்வாரும் பணியில் ஈடுபட்டார்.
அப்போது, கிணற்றின் ஒரு பகுதி கரை இடிந்து விழுந்ததில் ஐயப்பன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
எனினும், அங்கு ஐயப்பன் உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், அவலூர்பேட்டை போலீஸார் கிணற்றின் உரிமையாளரான சுப்பிரமணி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.