கள்ளக்குறிச்சியில் விதிகளை மீறும் ஆட்டோக்கள் பறிமுதல்: காவல் துறை எச்சரிக்கை

கள்ளக்குறிச்சியில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் எச்சரித்தனர்.

கள்ளக்குறிச்சியில் விதிகளை மீறி இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று காவல் துறை மற்றும் வட்டாரப் போக்குவரத்துத் துறையினர் எச்சரித்தனர்.
கள்ளக்குறிச்சியில் காவல் துறை, வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில், ஆட்டோ ஓட்டுநர்களுக்கான விழிப்புணர்வுக் கூட்டம் ஏகேடி பள்ளி மையத்தில் புதன்கிழமை நடைபெற்றது. கள்ளக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளர் ராமநாதன் தலைமை வகித்தார். வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் சிவக்குமார், காவல் ஆய்வாளர் தங்க.விஜயகுமார் ஆகியோர் ஆலோசனைகளை வழங்கிப் பேசினார்.
கள்ளக்குறிச்சியில் 400-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அதிகளவில் ஆட்டோக்கள் இயங்குவதால், பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது. இதனை தவிர்க்கும் வகையில், கூட்டத்தில் காவல் துறை அதிகாரிகள் ஆலோசனைகளை வழங்கினர்.
ஆட்டோ ஓட்டுநர்கள் போக்குவரத்து விதிகளை மதித்து ஆட்டோக்களை இயக்க வேண்டும். ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே இயக்க வேண்டும். கட்டாயம் சீருடை அணிந்திருக்க வேண்டும். பதிவு செய்த ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். அனுமதி பெற்ற ஆட்டோக்களை மட்டுமே இயங்க வேண்டும்.
போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் விதத்தில், போக்குவரத்து விதிகளுக்கு உள்பட்டு இயக்க வேண்டும். ஆட்டோ நிறுத்தங்களில் மட்டுமே ஆட்டோக்களை நிறுத்தி வைக்க வேண்டும். ஆபத்தான வகையில், பள்ளி மாணவர்களை அதிகளவில் ஏற்றிச் செல்லக்கூடாது. பதிவு செய்யாமலும், விதி மீறியும் இயக்கப்படும் ஆட்டோக்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்தனர். ஆட்டோ உரிமையாளர்கள், ஓட்டுநர்கள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com