சின்னசேலத்தில் ஜமாபந்தி முகாம்: மழைவாழ் மக்கள் 229 பேருக்கு வசிப்பிடத்துக்கான சான்றிதழ்

சின்ன சேலம் வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 7-ஆவது நாள் ஜமாபந்தி முகாமில், மலைவாழ் மக்கள்

சின்ன சேலம் வட்டத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 7-ஆவது நாள் ஜமாபந்தி முகாமில், மலைவாழ் மக்கள் 229 பேருக்கு வன உரிமைச் சட்டத்தின் கீழ், வசிப்பிடத்துக்கான தனி உரிமைச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
சின்னசேலம் வட்டம், வெள்ளிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில்  மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில், வருவாய்த் தீர்வாய முகாம் (ஜமாபந்தி) நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற 
7-ஆவது நாள் முகாமில், வெள்ளிமலை குறு வட்டத்துக்கு உள்பட்ட கிராம மக்களிடமிருந்து சாதிச்சான்று கோரி 1,609 மனுக்களும், முதியோர் ஓய்வூதியம் கோரி 97 மனுக்களும், பிற கோரிக்கைகள் உள்ளிட்ட மொத்தம் 1,786 மனுக்களை மாவட்ட ஆட்சியர் பெற்றார்.
இந்த முகாமில், கல்வராயன்மலை, வெள்ளிமலை குறு வட்டங்களுக்கு உள்பட்ட நாரணம்பட்டு, கீழாத்துக்குழி, மொழிப்பட்டு, பொட்டியம், முண்டியூர், வாரம், தொரங்கூர், உப்பூர் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மொத்தம் 316 பேருக்கு சாதிச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
மேலும், கல்வராயன்மலை ஒன்றியத்துக்கு உள்பட்ட தும்பராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 59 பேருக்கும், தேக்கம்பட்டைச் சேர்ந்த 14 பேர், பெருக்கச்சேரியைச் சேர்ந்த 4 பேர்,  சின்னகருவேலம்பாடியைச் சேர்ந்த 2 பேர், வயலம்பாடியில் 5 பேர், பெரும்பூரில் 18 பேர், பாக்கணத்தில் 12 பேர், கூடலூரில் 10 பேர், பாச்சேரியில் 7 பேர், தும்பையில் 9 பேர், துரூரில் 15 பேர், ஆணைமடுவில் 13 பேர், மான்கொம்பில் 22 பேர், சிறுக்களுரில்12 பேர் உள்பட மொத்தம் 229 பேருக்கு வன 
உரிமைச் சட்டத்தின் கீழ், வசிப்பிடத்துக்கான தனி உரிமை சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
இதைத் தொடர்ந்து, தோட்டக்கலைத் துறை சார்பில், சொட்டு நீர் பாசனக்கருவி,  மழைத்தூவான், தக்காளி நாற்றுகளும் வழங்கப்பட்டன. இந்த வகையில்,  மொத்தம் 549 பேருக்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டன.
முகாமில், திமுக எம்எல்ஏ தா.உதயசூரியன், மாவட்ட 
வருவாய் அலுவலர் இரா.பிரியா, ஊரக வளர்ச்சித் திட்ட இயக்குநர் வெ.மகேந்திரன், தோட்டக்கலைத் துறை உதவி இயக்குநர் எஸ்.சதீஷ்குமார், சின்னசேலம் வட்டாட்சியர் சு.இந்திரா,  தனி வட்டாட்சியர்கள் ராஜராஜன், மணிகண்டன், கு.பிரகாஷ்வேல், வெள்ளிமலை வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி உள்ளிட்ட அலுவலர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com