விழுப்புரம் அரசு கலைக் கல்லூரியில் ஜூன் 19-இல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2019 - 20ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.

விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 2019 - 20ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வு வரும் 19-ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியின் முதல்வர் (பொ) மாதவி வெளியிட்ட செய்திக் குறிப்பு: கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வரும் 19-ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு ஒதுக்கீட்டுக்கான இடங்களுடன் தொடங்குகிறது. இதில், விளையாட்டு வீரர்கள், மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படை வீரர்களின் பிள்ளைகள் கலந்து கொள்ளலாம்.
அன்று பிற்பகல் 2 மணிக்கு பி.ஏ. ஆங்கில இலக்கியம் பாடத்துத்துக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில், ஆங்கிலத்தில் 60 முதல் 100 
மதிப்பெண்கள் வரையில் பெற்றவர்கள் பங்கேற்கலாம்.
தொடர்ந்து, ஜூன் 20-ஆம் தேதி காலை 10 மணிக்கு பி.ஏ. தமிழ் இலக்கியம் பாடத்துக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில், தமிழில் 70 முதல் 100 மதிப்பெண்கள் வரையில் பெற்றவர்கள் பங்கேற்கலாம். அன்று பிற்பகல் 2 மணிக்கு பி.காம். (தொழில் பிரிவு) கலந்தாய்வு நடைபெறும். இதில், தரம் எண் 1 முதல் 100 வரையில் உள்ளவர்கள் பங்கேற்கலாம்.
இதையடுத்து, ஜூன் 21-ஆம் தேதி காலை 10 மணிக்கு பி.எஸ்சி. 
கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், புள்ளியியல், கணினி அறிவியல், பி.சி.ஏ. ஆகிய பாடப் பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும். இதில், பகுதி மூன்று பாடத்தில் 400 முதல் 275 வரையில் மதிப்பெண்கள் எடுத்துள்ளவர்கள் பங்கேற்கலாம். இதைத் தொடர்ந்து, ஜூன் 24-ஆம் தேதி காலை 10 மணிக்கு அதே பாடங்ளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. இதில், பகுதி மூன்று பாடத்தில் 274 முதல் 240 வரையில் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் பங்கேற்கலாம்.
ஜூன் 25-ஆம் தேதி காலை 10 மணிக்கு பி.ஏ. வரலாறு, பொருளியல், பி.காம். வணிகவியல் படங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில், பகுதி மூன்று பாடத்தில் 400 முதல் 250 வரையில் மதிப்பெண்கள் எடுத்தவர்கள் பங்கேற்கலாம்.
இதைத் தொடர்ந்து, ஜூன் 26-ஆம் தேதி காலை 10 மணிக்கு அதே பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். இதில், பகுதி மூன்று பாடத்தில் 249 முதல் 200 வரையில் மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகள் பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com