கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 

தூய்மைக் காவலர்கள், துப்புரவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தூய்மைக் காவலர்கள், துப்புரவு ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி, கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில் விழுப்புரத்தில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்ட சிறப்புத் தலைவர் ஆர்.ஜீவா தலைமை வகித்தார். சிஐடியூ மாவட்டத் தலைவர் பி.குமார், மாவட்டச் செயலர் எஸ்.முத்துக்குமரன், பொருளர் கே.அம்பிகாபதி, துணைச் செயலர் வி.பாலகிருஷ்ணன், கிராம பஞ்சாயத்து ஊழியர் சங்க மாநில இணைச் செயலர் ஏ.வீராசாமி உள்ளிட்டோர் கோரிக்கை உரையாற்றினர்.
 கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி இயக்குபவர்கள், கிராம துப்புரவு ஊழியர்கள், தூய்மைக் காவலர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், ஏழாவது ஊதியக்குழு ஆணைப்படி, ஊதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றி வரும் குடிநீர் தேக்கத் தொட்டி இயக்குபவர்களுக்கு குறைந்த பட்சம் ரூ.11,320 சம்பளம், துப்புரவு ஊழியர்களுக்கு ரூ.9,320 வழங்க வேண்டும், தினக்கூலி ஒப்பந்த முறையை கைவிட்டு, பணி நிரந்தரம் செய்ய வேண்டும். கிராம பஞ்சாயத்து ஊழியர்கள் இறந்தால், அவர்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். அவர்களுக்கு மருத்துவ காப்பீடு திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கிராமப் பஞ்சாயத்து ஊழியர்கள் சங்கம் சார்பில், கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
 ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றியத் தலைவர் எஸ்.முருகேசன் தலைமை வகித்தார். ஒன்றியச் செயலர் பி.கொளஞ்சி, ஒன்றியப் பொருளாளர் அ.மணிவேல், துணைத் தலைவர்கள் எஸ்.ராதாகிருஷ்ணன், எம்.கொளஞ்சி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
 கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டத் தலைவர் வீ.வீராசாமி, சிஐடியூ மாவட்டப் பொருளாளர் கே.விஜயகுமார், அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் சங்கத் தலைவர் இரா.தெய்வீகன் உள்ளிட்டோர் பேசினர்.
 ஆர்ப்பாட்டத்தில், கிராம ஊராட்சிகளில் பணிபுரியும் ஓ.ஹெச்.டி. ஆபரேட்டர்கள், கிராம துப்புரவு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக்குழு ஆணைப்படி ஊதியம் மற்றும் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும், ஓ.ஹெச்.டி. ஆபரேட்டர்கள், துப்புரவு ஊழியர்கள் இறந்தால் அவர்களின் குடும்ப வாரிசுகளுக்கும் வேலை வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீடு திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com