ஆதிதிராவிடர் நலத் துறைக்கு நிலம் வழங்க அழைப்பு

ஆதிதிராவிடர் நலத் துறைக்கு பணம் பெற்றுக்கொண்டு நிலம் வழங்க விருப்பமுள்ளவர்கள் முன்வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத் துறைக்கு பணம் பெற்றுக்கொண்டு நிலம் வழங்க விருப்பமுள்ளவர்கள் முன்வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விழுப்புரம் மாவட்டத்தில் அனைத்து கிராமங்களிலும் உள்ள வீடற்ற ஆதிதிராவிடர்களுக்கு, இலவச வீட்டுமனை வழங்கும் திட்டத்தின் கீழ் 2019-2020-ஆம் நிதியாண்டுக்கு நில எடுப்புக்கான பணிகள் மேற்கொள்ளும்போது, தனியாரிடம் பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே நில எடுப்பு செய்து ஆதிதிராவிடர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நில உரிமையாளர்கள், பட்டாதாரர்கள் தாமாகவே முன்வந்து நிலம் அளிக்கலாம்.
 அந்த நிலத்துக்கு பேச்சுவார்த்தையின் மூலம் நிர்ணயம் செய்யப்படும் நில மதிப்பின் அடிப்படையில் கிரயத் தொகை வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com