தேர்தல் செலவினக் கணக்குகள் ஆய்வு

விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவினக் கணக்குகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவினக் கணக்குகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்யப்பட்டது. வேட்பாளர்களின் செலவினக் கணக்குகள் முழுமையாக வந்து சேராததால், அவை இறுதி செய்யப்படவில்லை என தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் தெரிவித்தனர்.
 விழுப்புரம் மாவட்டத்தில், ஏப்.18 ஆம் தேதி நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்களின் செலவினக் கணக்குகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
 தேர்தல் தேதி அறிவித்த நாள் முதல் தேர்தலுக்கு முந்தைய ஏப்.14-ஆம் தேதி வரை வேட்பாளர்கள் செய்த செலவினக் கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு, தேர்தல் செலவினப் பார்வையாளர்களால் மூன்று முறை ஆய்வு செய்யப்பட்டது. இறுதிக்கட்ட செலவினக் கணக்குகள் ஆய்வு தற்போது நடைபெற்று வருகிறது. தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியிலிருந்து, 30 தினங்களுக்குள் இறுதி செலவினக் கணக்குகளை வேட்பாளர்கள் தாக்கல் செய்து முடிக்க வேண்டும். அதன்படி, வேட்பாளர்கள் இறுதி செலவினக் கணக்குகளை தாக்கல் செய்து வருகின்றனர். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் செலவினக் கணக்கு ஆய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) ஸ்ரீதர் தலைமை வகித்தார். உதவி தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் ஞானவேல், தட்சணாமூர்த்தி, விமல், சரஸ்வதி, லில்லி, தனசேகர் உள்ளிட்டோரும், வேட்பாளர்கள் தரப்பில் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணன், சுயேச்சைகள் அரசன், கதிர்வேல், தேசிங்கு மற்றும் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.
 வேட்பாளர்கள் இறுதிக் கட்ட செலவினக் கணக்குகளை சமர்ப்பித்தனர்.
 இதனை செலவினப் பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர். இதே போல, கள்ளக்குறிச்சி தொகுதிக்கு தேர்தல் செலவினப் பார்வையாளர் சீத்தாராமாராவ் தலைமையில், உதவி தேர்தல் செலவினப் பார்வையாளர் ஐயப்பன், தில்லைகோவிந்தன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். வேட்பாளர்கள், பிரதிநிதிகள் பங்கேற்று செலவினக் கணக்குகளை சமர்ப்பித்தனர்.
 இந்தக் கூட்டத்திலும், இறுதிக் கட்ட செலவினக் கணக்குகள் இன்னும் வந்து சேரவில்லை என்றும், ஜூன் 22-ஆம் தேதிக்குள் கணக்குகளை சமர்ப்பிக்க வேண்டும்.
 அதற்குள் தேர்தல் செலவினப் பார்வையாளர் தலைமையில் செலவினக் கணக்குகளை இறுதி செய்து தேர்தல் துறைக்கு தெரிவிக்கப்படும். உரிய காலத்துக்குள் கணக்கை தாக்கல் செய்யாவிட்டால், அடுத்த தேர்தலில் போட்டியிட முடியாத நிலை ஏற்படும் என்று, செலவினப் பார்வையாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com