சுடச்சுட

  

  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, உளுந்தூர்பேட்டை அருகே வாணாம்பட்டு கிராமத்தில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
   மாவட்டக்குழு ஜி.ஏழுமலை தலைமை வகித்தார். மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்கட்சியின் மாவட்டச் செயலர் எம்.வெங்கடேசன், அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாவட்ட ச்செயலர் டி.கலியமூர்த்தி, தொகுதி செயலர் எஸ்.பாபு, கிளைச் செயலர் மணிகண்டன், மாவட்டக்குழு ஆர்.கந்தசாமி, சி.கலாமணி, பி.பெரியான் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
   வாணாம்பட்டு கிராமத்தில் வீடு, வீட்டுமனை இல்லாதவர்கள் விவரத்தை கணக்கெடுத்து வீடு, மனைப்பட்டா வழங்க வேண்டும், கான்கிரீட் வீடு கட்டிக் கொடுக்க வேண்டும், மகாத்மா காந்தி வேலைவாய்ப்பு திட்டத்தில் வேலை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai