சுடச்சுட

  

  செஞ்சி ஒன்றிய பகுதியில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, செஞ்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திமுக சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செஞ்சி கிழக்கு ஒன்றியச் செயலர் ஆர்.விஜயகுமார் வரவேற்றார்.
   மேற்கு ஒன்றியச் செயலர் எம்.விஜயராகவன் முன்னிலை வகித்தார்.
   விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலர் செஞ்சி மஸ்தான் எம்எல்ஏ தலைமை வகித்து கண்டன உரையாற்றினார். குடிநீர் தட்டுப்பாட்டைத் தடுக்கத் தவறிய அதிமுக அரசைக் கண்டித்தும், போர்க்கால அடிப்படையில் குடிநீர் பற்றாக்குறையைப் போக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
   முன்னாள் எம்எல்ஏ பா.செந்தமிழ்ச்செல்வன், விவசாய அணி அரங்க.ஏழுமலை, இளைஞர் அணி க.ஆனந்த், அஞ்சாஞ்சேரி கணேசன், வழக்குரைஞர் மணிவண்ணன், பி.கே.பச்சையப்பன், அணையேரி ரவி, தொண்டர் அணி பாஷா, ஜம்போதி பழனி, என்.ஆர்.பேட்டை பழனி, அய்யாதுரை மற்றும் ஏராளமான பெண்கள் காலி குடங்களுடன் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai