சுடச்சுட

    

    திருவெண்ணெய்நல்லூரில் பத்து ரூபாய் நாணயங்களை வங்கி நிர்வாகம் வாங்க மறுப்பதாகக் கூறி, சமூக ஆர்வலர்கள் செவ்வாய்க்கிழமை தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     திருவெண்ணெய்நல்லூரில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக நீண்ட நாள்களாக புகார் நிலவி வந்தது. இதையடுத்து, சமூக ஆர்வலர்கள் வழக்குரைஞர் ஹேமாராஜன், டி.எஸ்.முருகன், வழக்குரைஞர் சோலையப்பன், அச்சு முருகன், தர்மேந்திரன் ஆகியோர் பத்து ரூபாய் நாணயங்களை வங்கிக்கு எடுத்து சென்றனர். ஆனால், வங்கித் தரப்பில் வாங்க மறுத்ததால், அவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, வங்கி முன்பு தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
     இதையடுத்து, வங்கியின் கிளை மேலாளர் பவன், தனிப்பிரிவு காவலர் இளையராஜா ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
     பேச்சுவார்த்தையில், பத்து ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொள்வதாக உறுதி அளித்தனர். பின்னர், அவர்கள் கொடுத்த நாணயங்களை வாங்கி வங்கியில் டெபாசிட் செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai