சுடச்சுட

  

  பயன்பாட்டுக்கு வந்தன எச்சரிக்கை மின்விளக்குகள்: தினமணி செய்தி எதிரொலி

  By DIN  |   Published on : 26th June 2019 08:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் நகரில் புதிதாக அமைக்கப்பட்டு காட்சிப் பொருளாக இருந்து வந்த விபத்து தடுப்பு எச்சரிக்கை மின் விளக்குகள் தினமணி செய்தி எதிரொலியாக பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
   விழுப்புரம் நகரில் உள்ள சென்னை நெடுஞ்சாலை, திருச்சி நெடுஞ்சாலை, நேருஜி சாலை ஆகிய சாலைகளில் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் விபத்துகளை தடுக்கும் வகையில் வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை ஒளிரும் மின் விளக்குகள் கடந்த ஒரு மாதம் முன்பு காவல் துறை சார்பில் அமைக்கப்பட்டன. ஆனால், அவை பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப் பொருளாக இருந்து வந்தன. இதனால், பல லட்சம் ரூபாய் செலவு செய்து அமைக்கப்பட்ட அந்த விளக்குகள் பயனற்றுக் கிடந்தன.
   இது குறித்த செய்தி தினமணி நாளிதழில் கடந்த திங்கள்கிழமை (ஜூன் 24) வெளியானது. இதையடுத்து, காவல்துறை அந்த விளக்குகளை எரிய வைக்கும் பணியை விரைவுபடுத்தின. அரசு மருத்துவமனை எதிரில், இ.எஸ். மருத்துவமனை எதிரில், பெருந்திட்ட வளாகம் நுழைவாயில் எதிரே என்று 9 இடங்களில் இந்த விளக்குகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டன. சிகப்பு, நீலம் வண்ணங்களில், அணைந்து எரியும் இந்த விளக்குகள் வாகன ஓட்டிகளை கவனமாக இயக்க எச்சரிக்கும் வகையில் உள்ளன. இது வாகன ஓட்டிகளுக்கு பயனுள்ளதாக அமைந்துள்ளன.
   பெருபான்மையான விளக்குகள் பயன்பாட்டுக்கு வந்துள்ள நிலையில், இன்னும் பயன்பாட்டுக்கு வராமல் உள்ள ஒரு சில விளக்குகளும் இரண்டு நாள்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று விழுப்புரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் திருமால் தெரிவித்தார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai