பாஜக ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 28th June 2019 08:15 AM | Last Updated : 28th June 2019 08:15 AM | அ+அ அ- |

விழுப்புரம் கிழக்கு மாவட்ட பாஜக சார்பில், கட்சி உறுப்பினர்கள் சேர்க்கை ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம் எதிரேயுள்ள கூட்டரங்கில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, தஞ்சை கோட்ட அமைப்புச் செயலர் ஐயாரப்பன் தலைமை வகித்தார். சிதம்பரம் கோட்டப் பொறுப்பாளர் அருள் முன்னிலை வகித்தார். விழுப்புரம் மாவட்டத் தலைவர் விநாயகம் வரவேற்றார்.
மாவட்டப் பொருளாளர் அன்பழகன், இணைப் பொருளாளர் கோதண்டபாணி ஆகியோர் உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்களை அறிமுகம் செய்துவைத்துப் பேசினர். சிறுபான்மையினர் பிரிவு மாநிலத் தலைவர் ஆசிம் பாஷா, உறுப்பினர் சேர்க்கை நடைமுறைகள் குறித்து விளக்கினார்.
மாவட்ட பொதுச் செயலர்கள் சுகுமார், ராமஜெயக்குமார், மாவட்ட நிர்வாகிகள் தனசேகரன், சக்திவேல், வினோத், ஒன்றிய நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ரவி, முருகன், சரவணன், வெங்கட்ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரத் தலைவர் பழனி நன்றி கூறினார்.