குற்றவியல் நீதித் துறையில் பணி வாய்ப்பு
By DIN | Published On : 02nd March 2019 09:32 AM | Last Updated : 02nd March 2019 09:32 AM | அ+அ அ- |

விழுப்புரம் மாவட்டத்தில் குற்றவியல் நீதித் துறையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிபதி காந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
விழுப்புரம் மாவட்ட குற்றவியல் நீதித் துறையில், தமிழ்நாடு நீதித் துறை அடிப்படை ஊழியர் பணியிடங்களில் (குருப்-டி) காலியாக உள்ள பதிவறை எழுத்தர்-8, அலுவலக உதவியாளர்-30, இரவுக் காவலாளி- 11, முழு நேர துப்புரவுப் பணியாளர்-3 ஆகிய காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் நடைபெறவுள்ளது.
மேலும் விவரங்களை ட்ற்ற்ல்ள்://க்ண்ள்ற்ழ்ண்ஸ்ரீற்ள்.ங்ஸ்ரீர்ன்ழ்ற்ள்.ஞ்ர்ஸ்.ண்ய்/ஸ்ண்ப்ன்ல்ல்ன்ழ்ஹம் என்ற இணையதள வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.