திமுக சார்பில் ரத்த தான முகாம்
By DIN | Published On : 04th March 2019 08:49 AM | Last Updated : 04th March 2019 08:49 AM | அ+அ அ- |

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, விழுப்புரம் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் ரத்த தான முகாம் விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது.
மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் தினகரன் வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக தளபதி நற்பணி மன்றத் தலைவர் பொன்.கௌதமசிகாமணி கலந்து கொண்டு ரத்த தான முகாமை தொடக்கி வைத்தார்.
விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து வந்த மருத்துவக் குழுவினர் ரத்தத்தை தானமாகப் பெற்றனர். இதில், மத்திய மாவட்டச் செயலாளர் க.பொன்முடி உள்ளிட்ட ஏராளமானோர் ரத்த தானம் செய்தனர்.மாவட்ட அவைத் தலைவர் ராதாமணி, மாவட்டப் பொருளாளர் புகழேந்தி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜெயச்சந்திரன், முத்தையன், தலைமை செயற்குழு உறுப்பினர் ஜனகராஜ், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் புஷ்பராஜ், நகரச் செயலாளர் சர்க்கரை, பொதுக்குழு உறுப்பினர் பஞ்சநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.