அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ மிதி விழா
By DIN | Published On : 08th March 2019 09:23 AM | Last Updated : 08th March 2019 09:23 AM | அ+அ அ- |

சின்னசேலம் வட்டம், கச்சிராயப்பாளையத்தில் அமைந்துள்ள ஸ்ரீ பருவதராஜகுமாரி (எ) ஸ்ரீ அங்காளபரமேஸ்வரி அம்மன் கோயிலில் தீ மிதி விழா புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை (மார்ச்1) காலை 10 மணிக்கு அம்மனுக்கு ஊரணி பொங்கல் வைத்தனர். பின்னர், காப்பு கட்டுதல் நடைபெற்றது. புதன்கிழமை மயானக் கொள்ளை நடைபெற்றது. வியாழக்கிழமை காலை பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். பின்னர் அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். வண்ண மலர்களால் அலங்காரம் செய்து மஹா தீபாராதனை நடைபெற்றது.
மாலை தீ மிதி விழா நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.