பள்ளிகளுக்கு கல்விச் சீர் வழங்கும் விழா

செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரணாமூர், பனப்பாக்கம், சின்னகரம் ஆகிய அரசுப் பள்ளிகளுக்கு கல்விச் சீர் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

செஞ்சி வட்டம், வல்லம் ஒன்றியத்துக்கு உள்பட்ட வீரணாமூர், பனப்பாக்கம், சின்னகரம் ஆகிய அரசுப் பள்ளிகளுக்கு கல்விச் சீர் வழங்கும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
 ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி இயக்கம் சார்பில், வல்லம் ஒன்றியம், வீரணாமூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு பள்ளி மேலாண்மைக் குழுவினர் சீர் வழங்கினர்.
 விழாவுக்கு பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவர் நளினி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் சந்திரன் வரவேற்றார். வல்லம் வட்டாரக் கல்வி அலுவலர் ரவி முன்னிலை வகித்தார். வட்டார வள மைய மேற்பார்வையாளர் சிவா, ஆசிரியர் பயிற்றுநர் ஜான் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
 கிராம பொது மக்கள் ரூ.1.5 லட்சம் மதிப்பில் பள்ளிக்குத் தேவையான மேசை, நாற்காலி, நோட்டுப் புத்தகம், எழுதுபொருள்கள், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் இயந்திரம் ஆகியவற்றை மேள தாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து வழங்கினர்.
 ஆசிரியர்கள் முத்துலட்சுமி எழிலரசி, பிருந்தா உள்பட ஊர் பொது மக்கள் பலர் கலந்து கொண்டனர்.
 பனப்பாக்கம்: பனப்பாக்கம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு கல்விச் சீர் வழங்கும் விழாவுக்கு பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் வி.யசோதா தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் இரா.கலைச்செல்வி வரவேற்றார். வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுநர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
 அருகாவூர் பள்ளித் தலைமை ஆசிரியர் ஜெ.கிருஷ்ணகுமார், முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினர் இரா.பெருமாள், ஓய்வு பெற்ற ஆசிரியர் ராமலிங்கம் உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர். பள்ளிக்கு மின் விசிறி, தண்ணீர் குடங்கள், விளையாட்டுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை பொது மக்கள் வழங்கினர்.
 சின்னகரம்: சின்னகரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற கல்விச் சீர் வழங்கும் விழாவுக்கு வட்டாரக் கல்வி அலுவலர் ரவி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் தீபலட்சுமி வரவேற்றார். ஆசிரியர் பயிற்றுநர் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். பள்ளிக்குத் தேவையான கல்வி உபகரணங்கள் மற்றும் பிற பொருள்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com