சுடச்சுட

  

  திருக்கோவிலூரில் சேஷ வாகனத்தில் தேகளீச பெருமாள் வீதி உலா நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
  திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோயிலில், பிரம்மோத்ஸவ விழா கடந்த செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாள்கள் நடைபெறுகிறது. 
  விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, மார்ச் 20-ஆம் தேதி காலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 
  இதையடுத்து தினமும் காலை, மாலை வேளைகளில் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா புறப்பாடு, விசேஷ திருமஞ்சனம் உள்ளிட்டவை நடைபெறு
  கின்றன. 
  இந்த நிலையில், வெள்ளிக்கிழமை சேஷ வாகனத்தில் பரமபத நாதனாக ஸ்ரீதேவி, பூதேவி சமேத தேகளீச பெருமாள் எழுந்தருளினார். பின்னர், சுவாமி வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. 
  விழா ஏற்பாடுகளை ஜீயர் ஸ்ரீனிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் அறிவுறுத்தலின் பேரில், கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai