சுடச்சுட

  

  தேர்தல் கூட்டம், பேரணி: அனுமதியின்றி நடத்தினால்  நடவடிக்கை: அதிகாரி எச்சரிக்கை

  By DIN  |   Published on : 16th March 2019 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரம் மாவட்டத்தில் தேர்தல் பிரசாரக் கூட்டங்கள்,  ஊர்வலங்களுக்கு இணையதளம் வழியாக உரிய முன் அனுமதி பெற வேண்டும் என்றும், இல்லாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாவட்டத் தேர்தல் அதிகாரி எச்சரித்தார்.
  இதுகுறித்து மாவட்டத் தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான இல.சுப்பிரமணியன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
  விழுப்புரம் மாவட்டத்தில் 2019 மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளதையொட்டி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, ஆரணி மக்களவைத் தொகுதிகளுக்கு உள்பட்ட அனைத்து அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள், அவர்களது பிரதிநிதிகளும், தேர்தல் பிரசார பொதுக் கூட்டங்கள், ஊர்வலங்கள், பேரணிகளை நடத்தவும், வாகனங்களைப் பயன்படுத்தவும், தற்காலிக கட்சி அலுவலகங்கள் திறக்கவும்,  ஒலிபெருக்கிகளை பயன்படுத்தவும், ஹெலிகாப்டர் இறங்குதளங்கள் அமைக்கவும் மாவட்டத் தேர்தல் அலுவலரிடம் முன் அனுமதி பெற வேண்டும்.
  அனுமதி கோரும் நபர்கள், தேர்தல் ஆணையம் சார்பில் ஏற்படுத்தியுள்ளs‌u‌v‌i‌d‌h​a.‌e​c‌i.‌g‌o‌v.‌i‌n என்ற இணையதளத்தின் வாயிலாக உரிய ஆவணங்களுடன், நிகழ்ச்சிக்கு 48 மணி நேரத்துக்கு முன்பாக மனு அளிக்க வேண்டும். முன் அனுமதி பெறாமல் பிரசாரக் கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள் நடத்தப்பட்டால், தேர்தல் நடத்தை விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai