சுடச்சுட

  

  புதுச்சேரியிலிருந்து காரில் கொண்டு சென்ற ரூ.11.97 லட்சம் வெள்ளிப் பொருள்கள் பறிமுதல்

  By DIN  |   Published on : 16th March 2019 10:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு காரில் கொண்டு செல்லப்பட்ட ரூ.11.97 லட்சம் மதிப்பிலான வெள்ளிப் பொருள்களை தேர்தல் பறக்கும் படையினர் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனர்.
  விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி, பணம், பரிசுப் பொருள்கள் நடமாட்டத்தைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில், விழுப்புரம் மாவட்ட தேர்தல் துறை சார்பில், 33 பறக்கும் படைகள், 33 நிலையான கண்காணிப்புக் குழுவினர் நியமிக்கப்பட்டு, முக்கிய நெடுஞ்சாலை சந்திப்புகளில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
  வானூர் அருகே பட்டானூர் சோதனைச் சாவடி பகுதியில், சென்னை-புதுச்சேரி தேசிய நெடுஞ்சாலையில் தோட்டக்கலை துணை இயக்குநர் இளவரசன் தலைமையில், தேர்தல் பறக்கும் படையினர் வியாழக்கிழமை நள்ளிரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
  அப்போது, புதுச்சேரியிலிருந்து சென்னைக்குச் சென்ற சொகுசு காரை மறித்து சோதனையிட்ட போது, அதில் 17 கிலோ வெள்ளிப் பொருள்கள் இருந்தது தெரிய வந்தது. தேர்தலுக்காகப் பரிசுப் பொருள்கள் வழங்குவதற்காக, அவை கொண்டு செல்லப்பட்டனவா? என்ற சந்தேகத்தின் பேரில், ஆய்வு செய்த பறக்கும் படையினர், காரில் இருந்த ரூ.11 லட்சத்து 97 ஆயிரத்து 684 மதிப்புடைய வெள்ளிப் பொருள்களை பறிமுதல் செய்தனர்.
  அந்த காரில் வந்தவர்களிடம் விசாரித்த போது, பெங்களூரு கவிக்கோ நகர் 9-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த மகாவீர் மகன் ராகுல் (26), பெங்களூரு ராஜா கோ பிளார், 3-வது குறுக்குத் தெருவைச் சேர்ந்த முக்தர் அலி மகன் இமாம்சிக் அலி (25) என்பதும், இவர்கள் புதுவையிலிருந்து வெள்ளிப் பொருள்களை வாங்கிக் கொண்டு, விற்பனைக்காக சென்னைக்கு கொண்டு சென்றதும் தெரிய வந்தது.
  இருப்பினும், முறையான ஆவணங்களின்றி வெள்ளிப் பொருள்களை எடுத்துச் சென்றதால், அவை பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டு இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், வானூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வெள்ளிப் பொருள்கள் வெள்ளிக்கிழமை ஒப்படைக்கப்பட்டன.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai