சுடச்சுட

  

  ரூ.53 லட்சம் கையாடல் புகார்: கூட்டுறவுச் சங்கத் தலைவர் கைது

  By DIN  |   Published on : 16th March 2019 10:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விழுப்புரத்தில் கூட்டுறவுச் சங்கத்தில் ரூ.53 லட்சம் கையாடல் செய்ததாக, அந்தச் சங்கத்தின் தலைவரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
  விழுப்புரத்தில் தந்தை பெரியார் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்தில் 1.4.2014 முதல் 28.2.2017 வரை ரூ.53.57 லட்சத்தை பணியாளர்கள் சிலர் கையாடல் செய்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக, விழுப்புரம் மாவட்ட வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸில் கூட்டுறவுத் துறை கடலூர் மண்டல துணைப் பதிவாளர் ஜெயபாலன் புகார் அளித்தார்.
  அதன்பேரில், சங்கத்தின் தலைவரான சங்கராபுரத்தை அடுத்துள்ள சோமாண்டார்குடியைச் சேர்ந்த நடராஜன்(60), செயலர்கள் சாந்தி உள்ளிட்ட 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
  நடராஜனை வணிக குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai