சுடச்சுட

  


  சங்கராபுரம் அருகே தேவபாண்டலம் கிளை நூலகத்தில் அரிமா சங்கம் சார்பில் கட்டப்பட்ட கூடுதல் கட்டடத்தின் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது. 
  விழாவுக்கு, வாசகர் வட்டத் தலைவர் அ.து.சண்முகம் தலைமை வகித்தார். அரிமா சங்கத் தலைவர் எஸ்.கலைச்செல்வி, நிர்வாகிகள் வி.சின்னசாமி, கே.வேலு, எம்.தெய்வீகன், ஆர்.பாண்டியன், ஏ.தண்டபாணி, ஆர்.அண்ணாமலை, எம்.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மாவட்ட நூலக அலுவலர் இரா.சுப்பிரமணியன், கிராம முக்கியஸ்தர் என்.எஸ்.ராமலிங்கநாட்டார் ஆகியோர் நூலகத்தில் கூடுதல் படிப்பக கட்டடத்தை அமைத்துக் கொடுத்த அரிமா சங்க நிர்வாகிகளை பாராட்டினர். 
  தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத் தலைவர் குறிஞ்சி அரங்க.செம்பியன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நூலகர் என்.மலர்கொடி நன்றி கூறினார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai