சுடச்சுட

  


  கள்ளக்குறிச்சி அருகே அனுமதி பெறாமல் ஆற்றில் மணல் அள்ளிய டிராக்டர் ஓட்டுநரை போலீஸார் கைது செய்தனர். 
  வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளர் ஜவ்வாதுஉசேன் மடம் மணிமுக்தா ஆற்றுப் பகுதியில் சனிக்கிழமை ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தார்.  அப்போது, ஆற்றில் டிராக்டரில் மணல் ஏற்றிக்கொண்டிருந்தனர். 
  அவர்களிடம் விசாரித்தபோது, மணல் அள்ளுவதற்கான அனுமதி பெறவில்லை எனத் தெரிய வந்தது.  
  இதையடுத்து, மணல் மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்த போலீஸார்,  டிராக்டர் ஓட்டுநரும், உரிமையாளருமான மாது (55) என்பவரை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai