பிரசார செலவின தொகை நிர்ணயம்: அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனை

விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில், தேர்தல் பிரசார வாகனங்கள்,  சுவரொட்டிகளின் செலவினங்கள் கணக்கிடும்


விழுப்புரம்:   விழுப்புரம் மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் முன்னிலையில், தேர்தல் பிரசார வாகனங்கள்,  சுவரொட்டிகளின் செலவினங்கள் கணக்கிடும் தொகையை முடிவு செய்தனர். 
விழுப்புரம் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலையொட்டி,  அரசியல் கட்சிகளால் விளம்பர வாகனங்கள்,  ஒலிபெருக்கிகள்,  சுவரொட்டிகள்,  கட்-அவுட்கள் மற்றும் இதர வகைகளில் செலவிடப்படும் செலவின கணக்குகளை கணக்கிட செலவினத்துக்கான விலைப்பட்டியல் உறுதி செய்வது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில்,  மாவட்ட தேர்தல் குழுவினரால் தயாரிக்கப்பட்ட விலைப்பட்டியல் கட்சி பிரதிநிதிகளிடம் முன் வைக்கப்பட்டது. 
 பிரசாரத்துக்கு பயன்படுத்தும் சுவரொட்டிகள்,  துண்டுப் பிரசுரங்கள்,  சாப்பாடு செலவுகள்,  வாகன வாடகைகள் போன்றவற்றை முன்வைத்து, ஆய்வு செய்து ஒப்புதல் பெற்றனர்.
கூட்டத்தில்,  திமுக மாவட்ட பொருளாளர் என்.புகழேந்தி,  அதிமுக நகரச் செயலர் ஜி.பாஸ்கரன்,  காங்கிரஸ் மாவட்டத் தலைவர் ரமேஷ்,  தேமுதிக நகரச் செயலர் மணிகண்டன்,  மார்க்சிஸ்ட் மாவட்டச் செயலர் சுப்பிரமணியன்,  பாஜக மாவட்ட பொதுச் செயலர் சுகுமாரன் உள்ளிட்ட கட்சிப் பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர்.  
மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.பிரியா,  கள்ளக்குறிச்சி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் அ.அனுசுயாதேவி,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்)  வீ.பிரபாகர்,  தேர்தல் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com