வெடி மருந்துக் கிடங்குகளில் மாவட்ட எஸ்.பி. ஆய்வு

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு தொடர்பாக மாவட்டத்தில் உள்ள வெடி மருந்துக் கிடங்குகளில் மாவட்ட காவல்

விழுப்புரம்: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, பாதுகாப்பு தொடர்பாக மாவட்டத்தில் உள்ள வெடி மருந்துக் கிடங்குகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
     மக்களவைத் தேர்தல் தமிழகத்தில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதற்குத் தேவையான வழிமுறைகளை செயல்படுத்துதல் மற்றும் பாதுகாப்பை பலப்படுத்தும் பணியில் மாவட்ட காவல்துறை தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 
அதன் ஒரு பகுதியாக, வெடி மருந்துகள் சமூக விரோதிகள், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் நபர்களுக்கு கிடைப்பதை தடுக்க போலீஸார் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.   தேர்தலையொட்டி, விழுப்புரம் மாவட்டம், ஒலக்கூர் அருகே கீழ்கரணையில் உள்ள வெடி மருந்துக் கிடங்கு, திண்டிவனம் அருகே சாரம் பகுதியில் உள்ள வெடி மருந்துக் கிடங்கு ஆகியவற்றில் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தார்.
  தொடர்ந்து, மயிலம் அருகே கர்ணாவூரில் உள்ள வெடிகள் தயாரிக்கும் தொழில்சாலை,  திண்டிவனம் பகுதி சாரத்தில் உள்ள வெடி மருந்து விற்பனை நிலையம் ஆகியவற்றிலும் ஆய்வு மேற்கொண்டார்.  இந்த ஆய்வு தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:  வெடி மருந்துகளை மிகவும் பாதுகாப்பாக கையாள வேண்டும். மாதம்தோறும் சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர்கள் மூலம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும், தற்போது தேர்தல் நேரம் என்பதால் கூடுதல் கவனம் செலுத்தி ஆய்வு செய்கிறோம்.
மாவட்டத்தில் 31 வெடி மருந்துக் கிடங்குகள், 33 வெடி மருந்து விற்பனை நிலையங்கள், 53 நாட்டு வெடிகள் தயாரிக்கும் இடங்கள் உள்ளன. இவற்றில் வெடி மருந்துகள் உரிய அளவில் பயன்படுத்தப்படுகின்றனவா? எவ்வளவு இருப்பு உள்ளது?. எவ்வளவு விற்பனை செய்யப்பட்டுள்ளது?. யார் யாருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது என்பன போன்ற விவரங்களை சேகரித்து ஆய்வு செய்து வருகிறோம். முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அவற்றின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜெயக்குமார். 
ஆய்வின் போது, திண்டிவனம் டி.எஸ்.பி. கனகேஸ்வரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com