ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம்: அமைச்சர் பங்கேற்பு

ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலை அறிமுகக் கூட்டம் செஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.


ஆரணி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலை அறிமுகக் கூட்டம் செஞ்சியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு செஞ்சி ஒன்றியச் செயலர் அ.கோவிந்தசாமி, மேல்மலையனூர் ஒன்றியச் செயலர் ஆர்.புண்ணியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
அதிமுக செஞ்சி நகரச் செயலர் வி.ஆர்.பிரித்விராஜ் வரவேற்றார். கூட்டத்துக்கு தலைமை வகித்து, அதிமுக வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை அறிமுகம் செய்து அமைச்சர் சி.வி.சண்முகம் பேசியதாவது: 
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இருக்குமா, இருக்காதா என்ற கேள்வி எழுந்து வருகிறது. பல்வேறு சூழ்ச்சிகளுக்கு மத்தியில் ஜெயலலிதாவின் ஆசியோடும், தொண்டர்களின் ஆதரவோடும் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு  இரண்டாண்டு காலத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது.
அதிமுகவுக்கு எதிர்காலம் இல்லை என்று சொல்பவர்களுக்கு மத்தியில் அந்தக் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டால் நல்லது என்று அரசியல் கட்சிகள் எண்ணியதால், அதிமுக வலுவான கூட்டணியை உருவாக்கியுள்ளது. எனவே, வரும் தேர்தலில் ஆரணி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வேட்பாளர் செஞ்சி வெ.ஏழுமலையை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன், பாமக முன்னாள் எம்.பி. துரை, எம்எல்ஏ தூசி மோகன், பாமக மாவட்டச் செயலர் ராஜேந்திரன், தேமுதிக பார்த்தசாரதி, சிவக்குமார், பாஜக மாவட்டச் செயலர் விநாயகம், மாநிலச் செயற்குழு உறுப்பினர் ராஜேந்திரன், பாமக கனல் பெருமாள், தமாகா மாநில துணை பொதுச்செயலர் வி.பி.என்.கோபிநாத், எம்ஜிஆர் மன்ற துணைச் செயலர் வி.ரங்கநாதன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com