Enable Javscript for better performance
செஞ்சி, உளுந்தூர்பேட்டைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள்- Dinamani

சுடச்சுட

    

    செஞ்சி, உளுந்தூர்பேட்டைக்கு போலீஸ் பாதுகாப்புடன் வந்த வாக்குப் பதிவு இயந்திரங்கள்

    By  செஞ்சி/உளுந்தூர்பேட்டை  |   Published on : 27th March 2019 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மக்களவைத் தேர்தலுக்காக செஞ்சி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள 304 வாக்குச்சாவடி மையங்களுக்கு தேவையான மின்னணு இயந்திரங்கள், வி.வி.பாட் (வாக்களித்ததை உறுதி செய்யும் இயந்திரம்) ஆகியவை இரும்புப் பெட்டிகளில் செவ்வாய்க்கிழமை செஞ்சிக்கு வந்தடைந்தன.
     விழுப்புரத்தில் இருந்து சரக்குப்பெட்டக லாரி மூலம் 35 இரும்புப் பெட்டிகளில் வந்திறங்கிய 304 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை திமுக பிரதிநிதி வழக்குரைஞர் மணிவண்ணன், காங்கிரஸ் பிரதிநிதி இளைஞர் அணி தலைவர் தினகரன், வட்டாரத் தலைவர் பாலப்பட்டு சண்முகம், பாஜக பிரதிநிதி மோகன் ஆகியோர் முன்னிலையில் செஞ்சி பேரவைத் தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் ஜெயக்குமார் தலைமையில் அலுவலக ஊழியர்கள் போலீஸ் பாதுகாப்புடன் செஞ்சி தேர்தல் பிரிவு அலுவலகத்தில் இறக்கி வைத்தனர்.
     அப்போது, செஞ்சி வட்டாட்சியர் ஆதிபகவன், வட்ட வழங்கல் அலுவலர் செல்வகுமார் உள்ளிட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
     உளுந்தூர்பேட்டை: அதேபோல, உளுந்தூர்பேட்டை சட்டப்பேரவைத் தொகுதிக்குத் தேவையான 422 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும், 435 விவிபாட் இயந்திரங்களும் விழுப்புரத்திலிருந்து உளுந்தூர்பேட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை இரவு போலீஸ் பாதுகாப்புடன் சரக்குப் பெட்டக லாரியில் கொண்டு வரப்பட்டன. இந்த இயந்திரங்களை உளுந்தூர்பேட்டை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் திருஞானம், தேர்தல் துணை அலுவலர் வேல்முருகன், ஆதிதிராவிடர் நல தனிவட்டாட்சியர் ஜெயலட்சுமி, மண்டல துணை வட்டாட்சியர்கள் மணிமேகலை, கார்த்திகேயன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai