Enable Javscript for better performance
சொத்துப் பத்திரத் தகராறு: கள்ளக்குறிச்சி அருகே ஒருவர் கொலை; இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சொத்துப் பத்திரத் தகராறு: கள்ளக்குறிச்சி அருகே ஒருவர் கொலை; இருவர் கைது

    By DIN  |   Published on : 27th March 2019 08:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கள்ளக்குறிச்சி அருகே சொத்து பத்திரம் தொடர்பான தகராறில் ஒருவர் திங்கள்கிழமை நள்ளிரவு கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, இளைஞர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டனர்.
     கள்ளக்குறிச்சியை அடுத்த மட்டிகைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் சின்னசாமி (71) மனைவி சிறுநிலா. இவர்களது மகன் வெங்கடேசன் (41). இவருக்கு திருமணம் ஆகவில்லையாம்.
     இவரிடம் அதே ஊரைச் சேர்ந்த, தனது நண்பரின் தாயான கண்ணுப்பிள்ளை மனைவி தங்கம் வீட்டுப் பத்திரத்தை யாரிடமாவது அடமானமாக வைத்து ரூ.50 ஆயிரம் கடனாக வாங்கித்தருமாறு கேட்டாராம். அதன்படி, வெங்கடேசன் தனக்கு தெரிந்த நபரிடம் பத்திரத்தை அடகு வைத்து ரூ.50ஆயிரம் வாங்கிக் கொடுத்தாராம்.
     திங்கள்கிழமை காலை தங்கம் மகன் சிவா (19), அவரது நண்பர் சடையம்பட்டு பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் வெற்றிவேல் (26) ஆகிய இருவரும் வெங்கடேசனிடம் ரூ.53ஆயிரத்தை கொடுத்து பத்திரத்தை வாங்கித் தரும்படி கூறினராம்.
     அதன்படி, வெங்கடேசன் பணத்தைக் கொடுத்து, பத்திரத்தை மீட்டு, தனது வீட்டுக்குக் கொண்டு சென்றனராம்.
     இந்த நிலையில், சிவா வெற்றிவேலுடன் வெங்கடேசனின் வீட்டுக்குச் சென்று பத்திரத்தை திருப்பித் தரும்படி கேட்டாராம்.
     அதற்கு, உனது அம்மாவிடமே கொடுத்து விடுகிறேன் என வெங்கடேசன் கூறினாராம். இதுதொடர்பாக, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதனிடையே, தங்கத்திடம் வீட்டுப் பத்திரத்தை வெங்கடேசன் ஒப்படைத்துவிட்டதாகவும் தெரிகிறது.
     இந்த நிலையில், திங்கள்கிழமை நள்ளிரவு சடையம்பட்டு ஆற்றுப்பகுதியில் வெங்கடேசன் முகத்தில் ரத்தக் காயத்துடன் இறந்து கிடந்தார்.
     அவரது பெற்றோர் அளித்த புகாரின் பேரில், சடலத்தை கச்சிராயப்பாளையம் போலீஸார் மீட்டு விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக சிவா, வெற்றிவேல் ஆகிய இருவரையும் காவல் ஆய்வாளர் வள்ளி செவ்வாய்க்கிழமை கைது செய்தார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai