Enable Javscript for better performance
தமிழ்ச் சங்க நாற்பெரும் விழா- Dinamani

சுடச்சுட

    

    திருக்கோவலூர் தமிழ்ச் சங்கம் சார்பில் நாற்பெரும் விழா அண்மையில் நடைபெற்றது.
     கபிலர் தொடர் ஆய்வரங்கம், உலக கவிதை தினம், உலக தண்ணீர் தினம், மாணவர்களுக்கு பரிசளிப்பு ஆகியவை நாற்பெரும் விழாவாக நடத்தப்பட்டன. திருக்கோவிலூரில் உள்ள தவத்திரு ஸ்ரீஞானியார் மடத்தில் நடைபெற்ற விழாவுக்கு, சங்கத் தலைவர் கவிமாமணி சிங்கார.உதியன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் ந.ராமர், கபிலர் தொன்மை ஆய்வு மையச் செயலர் வி.நல்லதம்பி, கலாம் மாணவர் விழிப்புணர்வு இயக்க மாவட்டத் தலைவர் பொன்.முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்கச் செயலர் பாரதிமணாளன் வரவேற்றார். விழாவில், கபிலர் காட்டிய ஒழுக்க நெறி என்ற தலைப்பில் தமிழாசிரியர் சி.குருராஜன், எது கவிதை என்ற தலைப்பில் புதுவை பேராசிரியர் ஆரோக்கியதாஸ், தண்ணீர் நம் உயிர் நீர் என்ற தலைப்பில் வரலாற்று ஆய்வாளர் துரைமலையமான் ஆகியோர் பேசினர்.
     ஓய்வுபெற்ற ஊராட்சிகள் உதவி இயக்குநர் அ.சிவகுருநாதன், ஆசிரியர் செ.முருகன், எழுத்தாளர் எம்.விருதுராஜா ஆகியோர் இனத்தைக் காக்க மரம் வளர்ப்போம் என்ற தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளைப் பாராட்டி பரிசு வழங்கினர்.
     நூலகர்கள் மு.சாந்தி, ஆனந்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். சங்கத் துணைத் தலைவர் பா.கார்த்திகேயன் நன்றி கூறினார்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai