Enable Javscript for better performance
அமைச்சர் தலைமையில் விழுப்புரத்தில் அதிமுகவினர் பிரசாரம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    அமைச்சர் தலைமையில் விழுப்புரத்தில் அதிமுகவினர் பிரசாரம் தொடக்கம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:32 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுகவினர் புதன்கிழமை தொடங்கினர்.
     விழுப்புரத்தில் அதிமுகவினர் கீழ்ப்பெரும்பாக்கம் சண்முகபெருமாள் கோவில் வீதியிலிருந்து தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குவதை ராசியாகக் கருதி, கடைப்பிடித்து வருகின்றனர். கடந்த முறை நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலின் போது விழுப்புரம் தொகுதியில் போட்டியிட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் அதே வீதியிலிருந்து பிரசாரத்தைத் தொடங்கி, வெற்றி பெற்றார். இதே போல, கடந்த உள்ளாட்சித் தேர்தலிலும் அதிமுகவினர் அங்கிருந்தே பிரசாரத்தைத் தொடங்கி வெற்றி கண்டனர்.
     இந்த நிலையில், அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவுறுத்தியதன்பேரில், தற்போதைய மக்களவைத் தேர்லுக்கும், கூட்டணி கட்சியான பாமக வேட்பாளர் வடிவேல் ராவணனுடன், அதே இடத்தில் தேர்தல் பிரசாரத்தை அதிமுகவினர் புதன்கிழமை தொடங்கினர்.
     கீழ்ப்பெரும்பாக்கம் சண்முகப்பெருமாள் கோவில் வீதியில் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில், பிற்பகல் 2 மணிக்கு பிரசாரத்தைத் தொடங்கினர். வேட்பாளர் எஸ்.வடிவேல்ராவணன், அதிமுக அமைப்புச் செயலர் இரா.லட்சுமணன் எம்பி, எம்எல்ஏ இரா.குமரகுரு, நகரச் செயலர் ஜி.பாஸ்கரன், ஒன்றியச் செயலர் பேட்டை முருகன், பாமக துணைப் பொதுச் செயலர் தங்க.ஜோதி, மாவட்டச் செயலர் புகழேந்தி, தேமுதிக மாவட்டச் செயலர் எல்.வெங்கடேசன் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.
     அந்தப் பகுதியில், திறந்தவெளி வேனில் பிரசாரம் செய்த அமைச்சர் சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் அங்குள்ள திரௌபதி அம்மன் கோயிலில் இறங்கி வழிபட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai