Enable Javscript for better performance
"எனது வாக்கு விற்பனைக்கு அல்ல': நீர் ஆதார சங்கத்தினர் விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல': நீர் ஆதார சங்கத்தினர் விழிப்புணர்வு பிரசாரம்

    By DIN  |   Published on : 28th March 2019 09:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செஞ்சிக்கோட்டை நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சார்பில் "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல' என்ற வாசகம் அடங்கிய துண்டுப்பிரசுங்களை புதன்கிழமை பொது மக்களுக்கு விநியோகித்து, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
     தேர்தலில் நூறு சதவீத வாக்குப்பதிவு இலக்கை அடைய இந்திய தேர்தல் ஆணையம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் "அனைவரும் வாக்களிப்போம்' "ஜனநாயக கடமையாற்றுவோம்' "வாக்குக்கு பணம் வாங்கமாட்டேன்' "எனது வாக்கு விற்பனைக்கு அல்ல என உறுதி ஏற்போம்' என அச்சிடப்பட்ட துண்டு பிரசுரங்களை செஞ்சிக்கோட்டை நீர் ஆதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தினர் செஞ்சி காந்தி பஜார் மற்றும் பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பொது மக்களுக்கு வழங்கினர்.
     இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் சக்திராஜன், செயலர் சுரேஷ், பொருளர் பாஸ்கரன், சங்க உறுப்பினர்கள் சீனுவாசன், மைக்கேல்ஆண்டனி, முனுசாமி, நூர்பாஷா, செந்தில், பார்த்திபன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai