Enable Javscript for better performance
கள்ளக்குறிச்சி: 18 வேட்பு மனுக்கள் தள்ளுபடி- Dinamani

சுடச்சுட

    

    கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதிக்காக வேட்பு மனு பரிசீலனையில், 18 பேரின் வேட்பு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.
     கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிட மொத்தம் 45 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
     வேட்பு மனு பரிசீலனை கள்ளக்குறிச்சி சார்-ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அறையில் புதன்கிழமை நடைபெற்றது. தேர்தல் நடத்தும் அலுவலரான அ.அனுசுயாதேவி தலைமையில் வேட்பு மனுக்களை ஆய்வு செய்து, 18 பேரின் மனுக்களை தள்ளுபடி செய்தார்.
     திமுக வேட்பாளர் பொன்.கௌதம சிகாமணி, தேமுதிக வேட்பாளர் எல்.கே.சுதீஷ், பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ச.சக்திவேல், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ஹ.கணேஷ், நாம் தமிழர் கட்சி ஷே.சர்புதீன் மற்றும் அமமுக வேட்பாளர் உள்பட 22 சுயேச்சைகளின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
     
     
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai