Enable Javscript for better performance
வாக்களிப்பை வலியுறுத்தி மாற்றுத் திறனாளிகள் பேரணி- Dinamani

சுடச்சுட

    

    மக்களவைத் தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி, மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி விழுப்புரத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
     விழுப்புரம் மாவட்ட ஆட்சியரக வளாகத்திலிருந்து பேரணியை மாவட்ட ஆட்சியரும், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலருமான இல.சுப்பிரமணியன் புதன்கிழமை காலை தொடக்கி வைத்தார்.
     18 வயது நிரம்பிய அனைத்து மாற்றுத் திறனாளிகளும் 100 சதவிகிதம் வாக்க வேண்டும், நமது வாக்குரிமையை ஜனநாயக முறைப்படி நிலை நாட்ட வேண்டும், மாற்றுத் திறனாளிகள் வாக்குச்சாவடியில் வரிசையில் நிற்காமல் நேரடியாக சென்று வாக்களிக்கலாம், மாற்றுத் திறனாளிகள் சிரமமின்றி வாக்களிக்க சாய்வு தளம், சக்கர நாற்காலி, உதவியாளர் மற்றும் கழிவறை போன்ற வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
     பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் துணையாளரை வாக்குச்சாவடிக்கு அழைத்துச் சென்று தங்களது வாக்கைப் பதிவு செய்யலாம், மாற்றுத்திறனாளி என்ற அடையாளம் பார்வைக்கு தெரியாத வகையில் இருப்பவர்கள் அவர்களின் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டையை காண்பித்து வாக்களிக்கலாம். இதுபோன்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய தேர்தல் விழிப்புணர்வு பதாகைகளை மாற்றுத் திறனாளிகள் கையில் ஏந்தியபடி நகரின் முக்கியச் சாலைகள் வழியாக ரயிலடி வரை பேரணியாகச் சென்றனர். இந்த விழிப்புணர்வுப் பேரணியில் ஏராமான மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
     முன்னதாக, தேர்தல் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் இல.சுப்பிரமணியன் மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கினார்.
     இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் பிரியா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(தேர்தல்) பிரபாகர், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், விழுப்புரம் டி.எஸ்.பி. திருமால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai