மீன் வலையில் சிக்கிய தொழிலாளி பலி
By DIN | Published On : 05th May 2019 12:05 AM | Last Updated : 05th May 2019 12:05 AM | அ+அ அ- |

கண்டமங்கலம் அருகே ஆற்று நீர் குட்டையில் குளித்தபோது, மீன் வலையில் சிக்கிய தொழிலாளி உயிரிழந்தார்.
கண்டமங்கலம் அருகே குமாரபாளையத்தைச் சேர்ந்த ரங்கசாமி மகன் புருஷோத்தமன் (42). விவசாயத் தொழிலாளி. இவர், பக்கிரிப்பாளையம் கிராமத்தில் உள்ள சங்கராபரணி ஆற்று குட்டையில் மீன் வளர்ப்புக்காக தண்ணீர் தேக்கி வைத்திருந்த பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை குளித்தார்.
அப்போது, அந்தக் குட்டையில் மீன் பிடிப்பதற்காக கட்டி வைத்திருந்த மீன் வலையில் புருஷோத்தமன் சிக்கிக்கொண்டதாகத் தெரிகிறது. இதனால், அவர் வெளியேற முடியாமல், தண்ணீரில் மூழ்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த கண்டமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கோதண்டராமன் தலைமையிலான போலீஸார் விரைந்து சென்று புருஷோத்தமனின் சடலத்தை மீட்டு, விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.