சங்கராபுரம் அருகே ஏரியில் பகிரங்க மண் திருட்டு: நடவடிக்கை எடுக்க கோரிக்கை

சங்கராபுரம் அருகே ஏரி மண் அதிகளவில் திருடப்படுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சங்கராபுரம் அருகே ஏரி மண் அதிகளவில் திருடப்படுவதைத் தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
 சங்கராபுரத்தை அடுத்த ஊராங்கானி கிராமத்தில் வனப் பகுதியையொட்டி பெரிய ஏரி உள்ளது. "மக்காசேனை ஏரி' என்றழைக்கப்படும் இந்த ஏரியில், அதே பகுதியைச் சேர்ந்த செங்கல் சூளை உரிமையாளர்கள் சிலர், பட்டப்பகலிலேயே பகிரங்கமாக பொக்லைன் மூலம் அதிகளவில் மண்ணை வெட்டி எடுத்து, டிப்பர் லாரிகளில் செங்கல் சூளைக்கு ஏற்றிச் சென்று, மலைபோல் மண்ணை குவித்து வருவதாகக் கூறப்படுகிறது.
 இதுகுறித்து அப்பகுதி சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: மாவட்ட கனிம வளத்துறையிடம் இருந்து அனுமதி பெற்றுத்தான் மண் வெட்டி எடுக்க வேண்டும்.
 தனியார் நிலங்களில் சொந்த உபயோகத்துக்கு மண் வெட்டி எடுப்பதாக இருந்தாலும் முறையாக அனுமதி பெற வேண்டும்.
 மேலும், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திடம் இருந்தும் தடையில்லாச் சான்று பெற வேண்டியது அவசியமாகும்.
 இவ்வாறு பல்வேறு கட்டங்களாக அனுமதி பெற்றுதான் மண் எடுக்க முடியும். ஆனால், இந்த விதிமுறைகள் எல்லாம் ஏட்டளவிலேயே உள்ளன.
 வருவாய்த் துறையினர் பெயரளவுக்குக் கூட கண்காணிப்புப் பணிக்கு செல்வதில்லை என்றனர்.
 இதுகுறித்து சங்கராபுரம் வருவாய் வட்டாட்சியர் பாண்டியனிடம் கேட்டபோது, இதுகுறித்து புகார் வந்தால் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com