Enable Javscript for better performance
லாரியிலிருந்து கீழே விழுந்த தொழிலாளி பலி- Dinamani

சுடச்சுட

    

    வளவனூர் அருகே லாரியிலிருந்து கீழே விழுந்த தொழிலாளி உயிரிழந்தார்.
     வளவனூர் அருகே உள்ள ஏ.கே.குச்சிப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் பாவாடை (32). கூலித் தொழிலாளி. இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு திருவக்கரை பகுதியிலிருந்து மண் ஏற்றி வந்த டிப்பர் லாரியின் பின்பக்கம் அமர்ந்து வந்துள்ளார். ஏ.கே.குச்சிப்பாளையம் பகுதியில் வந்தபோது, திடீரென லாரியை ஓட்டுநர் பத்மநாதன் (32) பின்பக்கமாக இக்கினாராம். இதனால் லாரியின் பின்பக்கக் கதவு திறந்ததால், அதன் மேலிருந்த பாவாடை கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.
     பின்னர், அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பாவாடை புதன்கிழமை இரவு உயிரிழந்தார். இதுகுறித்து வளவனூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai